அடுத்தடுத்து குழந்தைகள் – நடிகை அமலாபால் அதிரடி!

சென்னை (30 ஏப் 2020): திரைப்பட நடிகை அமலாபாலுக்கு சினிமா வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, இப்போது சமூக வலைதளங்களில்தான் அதிக பிசியாக உள்ளார்.

பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை அமலாபால் திடீரென இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். கண் மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அமலாபால் என்றாலே சர்ச்சை என்பது ஆகிவிட்டது. இவரின் விவாகரத்துக்குப் பின்னால், இவரையும் தமிழின் பிரபல நடிகரையும் முன்னிலை படுத்தி கிசுகிசுக்கப்பட்டது. அது அணைந்துள்ள நிலையில் அவரது இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சை கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது ஏதாவது ஒருவகையில் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் போட்டோ போட்டாவது அவர் ஃபீல்டில் இருப்பதை உறுதி படுத்திக் கொளவார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவர் பெண்களின் நிலை குறித்தும் அவர்களின் கஷ்டங்கள் குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில், “பெண்களின் கஷ்டத்தை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணின் பிரசவமும் ஒரு மரணம்தான். ஆனால் அவர்களின் வலியை ஆண்கள் அனுபவிப்பது இல்லை. ஒரு குழந்தை பிறந்ததும் அடுத்த குழந்தைக்கு ஆண்கள் தயாராகி விடுகிறார்கள்.

பெண்களை ஆண்கள் ஒரு போகப்பொருளாகவே பார்க்கிறார்கள் அவர்களின் உண்மையான வலியை உணர்வதில்லை” என்பதாக அமலாபால் பதிவிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்: