நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை (18ஜூலை,2020):தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். இவருக்கென்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு!

அவருடைய வீடு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. யாரோ ஒரு மர்ம நபர் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு போன் செய்து இன்னும் சற்று நேரத்தில் அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டுக்கு விரைந்து சென்று வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் அகப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையை முடித்துக்கொண்டு திரும்பினர்.

பின்னர் நடந்த தீவிர விசாரணையினபோது, விழுப்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தொலைபேசியில் அழைத்தது தெரியவந்தது. இவர் ஏற்கெனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் பின்னர் போலீஸார் தெரிந்துகொண்டனர்.

ஹாட் நியூஸ்: