ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!

மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர்

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார்.  கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் அமீரின் தாயார் பாத்து முத்து (வயது 85) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மெக்கா சென்றிருக்கும் அமீர் இன்று மதுரை திரும்புகிறார்.

முன்னதாக ஹஜ் கிரியைகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அவசரமாக ஊர் வருகிறார்.

அவரின் தாயார் இறுதி சடங்கு நாளை காலை 10 மணி அளவில் மதுரை நெல் பேட்டை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறுகிறது.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...