போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு நடிகை கைது!

288

பெங்களூரு (08 செப் 2020): போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகிணி திவேதி கைதான நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைதாகியுள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.