எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி – வீடியோ!

சென்னை (17 ஜன 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.

தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை – ஜி.வி. பிரகாஷ். ஜூன் 26 அன்று வெளியாகவுள்ளது.

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான இன்று, அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த ஒரு பாடலின் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஹாட் நியூஸ்: