தீவிரவாதிகளை எத்தனை படங்களில் அழிப்பீர்கள்? -பீஸ்ட் விமர்சனம்

Share this News:

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் பார்த்தவர்கள் ஏன் பார்த்தோம் என்கிற அளவுக்கு சலிப்பு தட்டுவதாக கூறுகின்றனர். விஜய் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லையாம்.

காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போட்டுள்ளார் வீர ராகவன் விஜய், ஆனால் அதை கைவிடும்படி உத்தரவு வர அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார் விஜய்.

எதிர்பாராத விதமாக விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறக்கிறது. இதனால் விஜய் சென்னைக்கு வர அங்கு பூஜாவுடன் காதல் வயப்படுகின்றார்.

ஒரே வேலையில் பூஜாவுடன் சுற்றி வரும் வீரா ராகவன் வேலை சம்மந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர். வீர ராகவனால் கைதான அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க கோரிக்கை வைகின்றனர். அந்த மாலில் உள்ளவர்களை விஜய் காப்பற்றினாரா, தீவிரவாதியை கொன்றாரா என்பதே மீதிக்கதை.

வீர ராகவானாக வரும் விஜய் டான்ஸ், தவிர வேறு எதிலும் க்ளிக் ஆகவில்லை. மேலும் பூஜா, VTV கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் தங்களின் பங்கை எதோ செய்துள்ளனர்.

யோகி பாபு, க்கு அதிகமான காட்சிகள் இல்லை, மத்த கதாபாத்திரங்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. படத்தில் எதிரியை அழிக்க விஜய் போடும் திட்டங்களை பார்க்கும் நமக்கு படத்தின் மீதான விறுவிறுப்பு சுத்தமாக இல்லை. முதல் பாதி ஏன் எடுத்தார்கள் என்று நினைக்கும்போது பீஸ்ட் இரண்டாம் பாதியில் சலிப்புதட்டும் வகையில் உள்ளது.

டாக்டர், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யை வைத்து இயக்கியுள்ள நெல்சன் எமற்றத்தை அளித்துள்ளார். அனிருத்தின் இரண்டு பாடல்களும் சூப்பர், ஆனால் BGM-யை தேட வேண்டியதாக உள்ளது. மனோஜ் பரமஹாசவின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பிளஸ். இரண்டாம் பாதியில் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளில் VFX சலிப்பு தட்டுகிறது.

அன்பறிவின் ஸ்டண்ட்ஸ் ஓகே. படம் பெரியளவில் நம்மை திருப்தி செய்யவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.


Share this News:

Leave a Reply