திரையுலகினரை குறி வைத்து தாக்கும் கொரோனா -அதிர்ச்சியில் நடிகர் அர்ஜுன்!

பெங்களூரு (16 ஜூலை 2020): அர்ஜுனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுகுறித்து துர்வா சார்ஜாவே ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், ”எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடிகர் அர்ஜுனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக அவரது குடும்பத்தினரை கொரோனா தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்கலாக திரையுலகினர் பலரும் கொரோனா பாதிப்படைந்து வருவது குறித்தும் குறிப்பாக தனது குடும்பத்தில் அடுத்தடுத்து இவ்வாறு நிகழ்ந்திருப்பது நடிகர் அர்ஜூனை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

ஹாட் நியூஸ்: