காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்- இயக்குநர் ஹரி!

217

சென்னை (28 ஜூன் 2020): சாத்தான்குளம் இரட்டை மரணத்திற்கு இயக்குநர் ஹரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு எதிராக திரைபிரலபலங்கள் உட்பட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் ஹரி இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதே.. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்!

காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்.” என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.