இப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க – பிரபல நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சென்னை (04 டிச 2019): நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சிப்படம் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மார்கெட் இல்லாத நடிகைகள் அவர்களது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

அந்த வகையில் பிக்பாஸுக்குப் பிறகு பெரிதாக எந்த படத்திலும் தலை காட்டாத யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தை வைரலாக்கி இருக்கிறது. கறுப்பு நிற உடையில் அவர் போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ வைரலாகி வரும் நிலையில், அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். (ஆபாசம் கருதி படம் தவிர்க்கப்பட்டுள்ளது)

மேலும் சிலர் இது போன்றெல்லாம் போட்டோ போட வேண்டாம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஹாட் நியூஸ்: