கொரோனா பாதிப்பால் பிரபல நடிகர் மரணம்!

ஷார்ஜா (09 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவை சேர்ந்த நடிகர் எஸ்.ஏ.ஹாசன் ஷார்ஜாவில் உயிரிழந்துள்ளார்.

துபாயில் டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டு வரும் எஸ்.ஏ.ஹாசன், கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ”ஹலோ துபாய்க்காரன்” என்ற மலையாள படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஹாசனுக்கு ஒரு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

ஹாட் நியூஸ்: