வரி ஏய்ப்பு – இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி ஆணையம் இறுதி நோட்டீஸ்!

சென்னை (26 ஏப் 2022): வரி பாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரிபாக்கியை கட்ட வேண்டி ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வரும்படியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21-ம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இளையராஜா தரப்பில் பதில் எதுவும் இல்லை.

இந்நிலையில் தற்போது வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. மேலும் 3 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அவருக்கு இறுதி நோட்டீஸை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

சமீபத்தில் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து சிக்கலை சிக்கியுள்ள நிலையில் வரிஏய்ப்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...