ஹலால் லவ் ஸ்டோரி!

Halal Love Story
Share this News:

halal-love-story
halal-love-story

ஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கியமானதொரு பிரச்னையை எடுத்துக் கொண்டு, அதை ஏளனமாக அல்லாமல், நகைச்சுவையாக கையாள்கின்றது. அந்த சமநிலைப் போக்கு அழகாக அமைந்திருப்பதால்தான், படத்தின் இயக்குனர் ஜகரிய்யா முஹம்மத் மற்றும் இணை எழுத்தாளர் முஹ்சின் பராரி ஆகியோர் சினிமாத்துவத்தின் பல தாத்பர்யங்களை அழகாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

கேரள கிராமம் ஒன்றின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், உள்ளூர்முஸ்லீம் இயக்கக் குழு ஒன்று மக்களைச் சென்றடைய கலை ஆற்றலை ஒரு ஊடகமாக நம்புகிறது, அதற்காக, தெரு நாடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாட்டுப்புறக் கலையானது, படத்தின் திரைக்கதையில் சுருக்கமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், சமூகத்தை ஆளும் கடுமையான மதக் கட்டளைகள் சில, ஆளுமை செலுத்தும் நிலையில், கலைத்தாகம் கொண்ட அவர்களின் மனத்தின், ஓரத்தில் செயலற்ற அழகியல் உணர்வு உள்ளது. அதனை ஜஸ்ட் லைக் தட் போல படம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வீதி நாடகக் கலைஞர்கள் இஸ்லாமியத் தத்துவ சாராம்சத்தைக் குறித்துப் பேசபலவற்றை முன்னிறுத்தினாலும், ஈராக்கைத் தாக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் முடிவையும் அமெரிக்க கோலா பிராண்டுகள் உள்ளூரில் முதலாளித்துவ கோலோச்சாக, பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதையும் கண்டிக்கின்றனர். இவ்வாறு இந்த வீதிக் குழு விசாலமானதொரு தேடுதலை இஸ்லாமிய தத்துவப் பரவலுடன் சேர்த்து அழகாய் கொண்டு செல்ல முனைகின்றது.

இந்நிலையில், இஸ்லாமியக் கொள்கையில் ‘ஹராம்’ (விலக்கப்பட்டவை) எனக் கருதப்படும் அம்சங்களை, காண்பிப்பதற்கு சினிமா-வை ஒரு வாய்ப்பாகக் குழு கருதுகிறது. ‘ஹலால்’ திரைப்படத்தை உருவாக்கும் இத்தகைய சவால் நிறைந்த பணி, வீதிக்குழுவை முன்னிறுத்திக் கொண்டிருக்கும் முதியோர் குழுத் தலைவர் ரஹீம் (நாசர் கருத்தேனி) மற்றும் பள்ளி ஆசிரியர் தவ்ஃபீக் (ஷரஃப் யு. தீன்) மீது விழுகிறது. சிராஜ் (ஜோஜு ஜார்ஜ்) என்ற உதவி இயக்குனரை இருவரும் அணுகுகிறார்கள்,

இருப்பினும் இறுதியில் ‘ஹலால்’ எனும் அனுமதிக்கப்பட்ட ரீதியிலே படம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தஃபீக் படத்தை எழுத முடிவு செய்கின்றார். இந்த ஹலால் கெமிஸ்ட்ரி நல்ல முறையில் வொர்க் அவுட் ஆகவும், உறவுகளின் புனிதத் தன்மை கெடாமல் இருக்கவும் வேண்டி சிராஜூம் தவ்ஃபீக்-கும் ஒரு நிஜ வாழ்க்கை ஜோடியையே நடிக்க வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக உண்மை வாழக்கை தம்பதிகளான, ஷெரீஃப் (இந்திரஜித் சுகுமாரன்) மற்றும் சுஹ்ரா (கிரேஸ் அந்தோணி) ஆகியோரை தங்கள் படத்தின் முன்னணி ஜோடியாக நடிக்க முடிவு செய்கிறார்கள்.

சுருங்கக் கூறினால், ஹலால் லவ் ஸ்டோரி ஒரு நையாண்டி படைப்பாகக் கண்டாலும், ஆனால் அது மட்டுமே பிரதானமாக அமைந்திருக்கவில்லை. மாறாக, உண்மை இஸ்லாமா அல்லது யதார்த்த சினிமாவா எனும் இருவேறு அம்சங்கள் குறித்து அதன் யதார்த்தம் கெடாமல், அழகாகக் கொண்டு செல்கின்றது. திருமண பாலின அரசியல் குறித்த உரையாடல்களையும் சுவாரஸ்யமாக எழுப்புகிறது,

‘ஒரு படத்திற்குள் படம்’ எடுப்பதை முன்னிறுத்தி, அதன் நடிகர்கள் மற்றும் குழுவினரிடையே ஒரு சிலரின் தனிப்பட்ட கதைகளில் இணையான துணைப்பொருட்களைக் காண்கிறது.

கூடுதல் பாத்திரங்கள் படத்தில் அமைந்திருந்தாலும் பிரதான கதாபாத்திரங்களான, பல கதாபாத்திரங்களைப் பற்றி பேசுவதை விட, கதை ஷெரீஃப் மற்றும் சுஹ்ராவின் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது, ஷெரீஃப்-சுஹ்ரா இணைந்த உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை அதிகமாகப் பேசுகின்றது. கதையின் ஆரம்பப் பகுதிகள் நுட்பமான நகைச்சுவையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன! மேலும் படத்தில் பணிபுரிவது அவர்களின் உணர்வுப்பூர்வ சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றது போன்ற ஈரானிய பாணி நுட்பங்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் தனது தனிப்பட்ட காரண காரியங்களால், பணியிலிருந்து தப்பிக்க போராடுகிறார். இந்த உபரிப் பிரச்னைகள், ‘தவிர்த்திருக்கலாம்’ என்கின்ற எந்தவொரு காரணமும் சொல்ல இயலாதவாறு மிக நேர்த்தியான விவரிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன,

படம் எடுக்க முடிவு செய்யப்படும்போது, படத்தின் ஆரம்பத்தில், இரண்டு கதாபாத்திரங்கள் குழந்தைகளை அடையக்கூடிய நல்ல சினிமாவைப் பற்றி விவாதிக்கின்றன. ஈரானிய திரைப்படங்களை, குறிப்பாக சில்ட்ரன் ஆஃப் ஹெவன்-ஐ எடுக்கலாம் என்று பரிந்துரைக்கிறது, ஒரு கதாபாத்திரம்.ஈரானிய திரைப்படத்துடன் ஒன்றிப்போன எவரேனும் ஒருவர், இப்படத்தை நுணுக்கமாகக் கண்டால், ஜக்கரிய்யா-வின் இந்தப் படைப்பின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அதன் தாக்கத்தை உணர்வார், ஆழமான உணர்வுகளைத் திறம்பட வெளிப்படுத்தும் விதத்தில், நல்ல கதை சொல்லும் பாணியின் பிடியை இழக்காமல்…!

படம் அதன் கதை சொல்லல், தொழில்நுட்ப செயலாக்கம் மற்றும் அது பதித்துச் செல்லும் கருத்துகள் ஆகியவற்றில் எளிமையும், இலாவகமும் கொண்டிருக்கின்றது.
இறுதியாக, ஹலால் லவ் ஸ்டோரி நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறது.

முற்றிலும் வித்தியாசப் போக்கைக் கொண்ட இப்படம் கணிப்புக்குரிய ஒன்றாக மட்டுமே இருக்கலாம், ஆனால் இப்படம் உங்கள் கவனத்தை ஈர்க்கும் கதையை உங்கள் முன்பாக உண்மையுடன் நிறுத்துகின்றது என்பதை படம் முடிந்தவுடன் நீங்கள் உணர்வது திண்ணம்!

அமேசான் டிஜிட்டல் தளத்தில் இப்பட்ம வெளியாகி பரந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
-மு.அ. அப்துல் முஸவ்விர்


Share this News:

Leave a Reply