கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக ரம்யாகிரிஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில், கமலுக்கு கொரோனா தொற்று குணமானதை தொடர்ந்து அவர் ஓய்வெடுக்காமல் மீண்டும் பிக்பாஸ் (Bigboss) நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார். ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது சுகாதாரத் துறையின் கட்டுப்பாடு உள்ள நிலையில், கமல்ஹாசன் அந்த விதிகளுக்கு மாறாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சொன்னதாக செய்தி வெளியானது.

ஆனால், இது பற்றி தற்போது ஒரு நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவருக்கு குறைந்து அளவு தொற்றே ஏற்பட்டிருந்தது என்றும், மருத்துவர்கள் 3ஆம் தேதி வரை அவர் தனிமையில் இருந்தால் போதும் என அறிவுறுத்தியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார். எனவே அவர் விதிகளை மீறவில்லை என்பதால், விளக்கம் கேட்கத் தேவையில்லை என தற்போது தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்,  இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

இதனிடையே, அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது.  அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.  அவருக்கு பதிலாக ரம்யாகிரிஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில், கமலுக்கு கொரோனா தொற்று குணமானதைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுக்காமல் மீண்டும் பிக்பாஸ் (Bigboss) நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார். ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற சுகாதாரத் துறையின் கட்டுப்பாடு உள்ள நிலையில், கமல்ஹாசன் அந்த விதிகளுக்கு மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சொன்னதாக செய்தி வெளியானது.

ஆனால், தற்போது ஒரு நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவருக்கு குறைந்து அளவு தொற்றே ஏற்பட்டிருந்தது என்றும், மருத்துவர்கள் 3ஆம் தேதி வரை அவர் தனிமையில் இருந்தால் போதும் என அறிவுறுத்தியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார். எனவே அவர் விதிகளை மீறவில்லை என்பதால், விளக்கம் கேட்கத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....