கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!

Share this News:

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது லவ் வருகிறது.

இதற்கிடையில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக துல்கர், ரக்‌ஷன் இருவரும் சில திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கிடையில் போலிசாக வரும் கௌதம் மேனன் வீட்டில் சிறு விபத்து சம்பவம். இதன் பின்னணி என்ன அவர் ஆராய தொடங்குகிறார். சில புகார்களும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் வர அவர் மறைமுக விசாரணையை தொடங்குகிறார்.

இந்நிலையில் ரக்‌ஷன், துல்கர், நிரஞ்சனி, ரிது என நால்வரும் கோவா செல்கிறார்கள். திடீரென போலிசார் துல்கர் மற்றும் ரக்‌ஷனை சுற்றி வளைக்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் ஏமாற்றம் பெரும் அதிர்ச்சி. கடைசியில் அவர்கள் நால்வரும் என்ன ஆனார்கள்? அவர்களின் பின்னணி, கௌதம் தேடி வந்ததன் மர்மம் என்ன என்பதே இந்த கண்ணும் கண்ணு கொள்ளையடித்தால் கதை.

ஹீரோ துல்கருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் ஓ காதல் கண்மணி படத்திற்கு பின் அவரை இப்போது தான் திரையில் ரசிகர்கள் மீண்டும் காண்கிறார்கள். வழக்கம் போல அவருக்கான சாக்லேட் பாய் கேரக்டர் போல தான் இந்த படத்திலும். ஆனால் ஒரு சென்சிட்டிவ் மைண்ட் பிளே.

ரக்‌ஷன் டிவி சானால் நிகழ்ச்சி தொகுப்பாளராக நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவர். தற்போது இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஒரு செகண்ட் ஹீரோ போல தெரிந்தாலும் அங்கங்கு தன் ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கிறார். இன்னும் நன்றாக ஸ்கோர் பண்ணலாமே ரக்‌ஷன்.

தெலுங்கு ஹீரோயின் ரிது வர்மா விஜபி 2 படத்திற்கு பின் தமிழில் இரண்டாவது படமாக இதன் மூலம் வந்திருக்கிறார். இவரின் பின்னணி என்ன என்பது இரண்டாவது பாதியில் தெரிந்த பின் பலருக்கும் ஒரு ஷாக். கவனம் பெற்றாலும் ஹீரோவுடன் இவருக்கும் பெரிதளவில் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி இல்லை.

சிகரம் தொடு, காவிய தலைவன், பென்சில், கபாலி என நிரஞ்சனியை ஏற்கனவே பல படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. இப்படத்தில் சீரியஸான ரோல். அதிலும் ரக்‌ஷன் செய்யும் குறும்பை இவர் டாமினேட் செய்வது ஸ்கோர் செய்வது கவர்கிறார்.

கௌதம் மேனன் ஒரு போலிஸ் அதிகாரியாக திரையில் வந்ததுமே பலரின் முகத்தில் புன்னகையாக பளிச்சிட்டது. சற்று கூடுதலான எதிர்பார்ப்பு. அவருக்கு உண்டான ஸ்டைலில் முக்கிய படத்தின் காட்சிகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸ். சில இடங்களில் இவரின் நடவடிக்கைகள் கண்களை கவர்கின்றன. கேமியோ ரோல்களில் படத்தில் வந்து போகும் அவரை முழுமையாக இப்படத்தில் காண்பது ரசிகர்களுக்கு மனநிறைவு.

இயக்குனர் தேசிங் பெரிய சாமி, நவீன முறையில் நடைபெறும் நூதன் திருட்டுகளை அரங்கேற்றும் நன்கு படித்த அதிமேதாவிகளை அம்பலப்படுத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மனதை கொள்ளையடிக்கும்


Share this News:

Leave a Reply