அரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்!

சென்னை (26 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அரசு பிறப்பித்துள்ள உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஒரு படப்பிடிப்பில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

ஆனால் 20 பேரைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேரை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க செயலாளர் குஷ்புவும் அரசின் உத்தரவின்படி நடப்பது சிரமம் என்று தெரிவித்துள்ளார்.

“சின்னத்திரை தொடர்கள் அனைத்துமே குடும்ப கதைகளை கொண்டது. அதனால் ஒரு காட்சியில் குறைந்தது 5 பேர் நடிப்பார்கள். நடிப்பவர்களுக்கு தலா ஒரு உதவியாளர் இருப்பார். பெப்சி பணியாளர்கள் 35 பேர் வரை தளத்தில் இருப்பார்கள். 12 பேர் தயாரிப்பு தரப்பில் இருந்து பணியாற்றுவார்கள். இந்த நிலையில் 20 பேரை கொண்டு எப்படி படப்பிடிப்பு நடத்த முடியும். எனவே இதுகுறித்து அரசு தரப்புடன் பேச்சு நடத்த இருக்கிறோம்.” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: