மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸாவது உறுதியானது!

சென்னை (24 நவ 2021): சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நாளை 25 ஆம் தேதி வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் டைம் லூப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு வரும் 25ஆம் தேதி அதாவது நாளை ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பேசிய சிம்பு தனக்கு நிறைய பிரச்னை கொடுக்கப்படுவதாகவும், ரொம்பவே கஷ்டப்படுவதாகவும் கூறி கண்ணீர் விட்டார். மேலும் அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கண்ணீர்விட்டு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் செம ஹேப்பியாக இருந்தனர். படக்குழுவினரும் நாளை மாநாடு படம் ரிலீஸ் என சமூக வலை தளங்களில் தெரிவித்து வந்தனர். இதனால் ரசிகர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர். இந்நிலையில் மாநாடு படம் நாளை ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து மாநாடு திரைப்படம் வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: