பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!

மும்பை (27 மே 2020): பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல் நடிகை.. கிரைம் பாட்ரோல், மேரி துர்கா, லால் இஷ்க் ஆகிய நிகழ்ச்சிகளில் நடித்துள்ளவர்..

கொரோனா காரணமாக லாக்டவுன் போட்டுவிடவும், அனைத்து ஷூட்டிங்கும் இந்தியா முழுக்க கேன்சல் ஆகிவிட்டது.. இதனால் ஒருவித மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். ஷூட்டிங் எப்போன்னு தெரியலயே என்று புலம்பியும் வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் மன உளைச்சல் அதிகமாகி தன்னுடைய ரூமிலேயே ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார். மறுநாள்தான் அவர் தூக்கில் தொங்கியது கவனிக்கப்பட்டு, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், மேத்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ஹிராநகர் போலீசார் விசாரணையும் நடத்திவருகிறார்கள்..

மேத்தா தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.. அதில் உறவுமுறைகள் குறித்தும் ஏமாற்றத்துடன் சில வரிகளை எழுதி உள்ளார். தற்கொலைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புகூட இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், “கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது” என்று தெரிவித்துள்ளார்.. இந்த பதிவுகள் எல்லாமே அவரது மன அழுத்ததை வெளிப்படுத்தி உள்ளது..

மேத்தாவின் தற்கொலையால் சக கலைஞர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..

ஹாட் நியூஸ்: