நடிகர் கமல் மகள் ஸ்ருதியின் வைரல் புகைப்படம்!

311

சென்னை (13 அக் 2020): நடிகர் கமலின் மகளான ஸ்ருதியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்,கிறார். இவர், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது..