கோவை கலவரம் – லியாக்கத் அலிகான் – மாநாடு பட உண்மையை உடைத்த வெங்கட்பிரபு!

Share this News:

மாநாடு திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தின் கரு உருவானது குறித்து விளக்கியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மாநாடு படம் பாடம் என்பதை விட ஒரு படமாகவே அதனை எடுத்தேன். ஆனால் அதன் கருவாக கோவை கலவரத்தையும் அதில் முஸ்லிம்கள் பலிகடா ஆக்கப்படதையும் கருவாக்கினேன்.

இதற்கு இயக்குநர் வசனகர்த்தா லியாக்கத் அலிகான் நன்கு உதவினார். நான் பொதுவானவன் எனக்கு இஸ்லாமியர்கள் அதிக அளவில் நண்பர்களாக உள்ளனர். நான் லண்டனில் பயின்றபோது எனக்கு நண்பர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான் அதிலும், குறிப்பாக பாகிஸ்தான் நண்பர்கள் எனக்கு அதிகம் இருந்தனர்.

அங்கு மதம் ஒரு பொருட்டே அல்ல, கருப்பு, வெள்ளை என்ற பிரிவைத் தவிர அங்கு வேறு எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை, இந்தியாவில்தான் ஜாதி, மத பிரிவுகளையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது.” என்றார்.

மேலும் மாநாடு படத்திற்கு பாஜக சார்பில் எதிர்ப்பு வந்ததையும் உடன் அண்ணாமலை அறிக்கையின் மூலம் அந்த பிரச்சனை அமுங்கியதையும் சுட்டிக்காட்டி, வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் தலையிட்டு மகனின் படத்திற்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப் பட்டபோது,

அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பா அப்படி தலையிட்டிருந்தால் எனக்கு தெரிவித்திருப்பார் என்று வெங்கட் பிரபு தெரிவித்தார். மேலும் சரியான முறையில் இவ்விவகாரத்தை அண்ணாமலை அனுகியதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

தீபாவளிக்கு வரவேண்டிய படம் ஏன் தள்ளிப்போனது? என்றும் ஆளுங்கட்சி தலையீடு இருந்ததா? என்பதற்கும் அப்படி எதுவும் இல்லை என்றும் சில தொழில்நுட்ப வேலை முடியாமல் இருந்ததால் படம் தள்ளிப்போனது என்று வெங்கட் பிரபு தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply