தளபதி விஜய் சங்கீதா விவாகரத்து?

சென்னை (07 ஜன 2023): நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிறது வாரிசு திரைப்படம். இதன் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது,

வழக்கமாக விஜய் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் அவரது மனைவி சங்கீதா பங்கேற்பார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் விஜயின் பெற்றோர் பங்கேற்றனர்.

இதனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து ஆகலாம் என்ற தகவல் தீயாக பரவியது. விக்கி பீடியாவில் கூட அவ்வாறு பதியப்பட்டிருந்தது.

ஆனால் விஜய் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், சங்கீதா தற்போது அமெரிக்காவில் இருப்பதால் வாரிசு ஆடியோ நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சற்று விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஹாட் நியூஸ்: