விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்!

138

சென்னை (17 செப் 2020): நடிகர் விஜய் படத்தை இயக்கிய இயக்குநர் பாபு சிவன் (55) இன்று காலமானார்.

விஜய்-அனுஷ்கா நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற நாடகத்தையும் இயக்கியுள்ளார். மேலும் தரணி இயக்கிய ‘குருவி’, பரதன் இயக்கிய பைரவா படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் இருந்த இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்

இந்நிலையில் இன்று திடீரென்று காலமானார். இவரின் இந்த திடீர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.