அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு கொரோனவை பரப்பியது இவர்தானாம்!

மும்பை (13 ஜூலை 2020): நடிகர் அமித்தாப் பச்சன் குடும்பத்துக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்ற கேள்வியே தற்போது மேலோங்கி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், மற்றும் மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்நிலையில் இந்நிலையில் வீட்டுக்குள் அடங்கி கிடந்த அமிதாபுக்கு யார்மூலம் கொரோனா பரவியிருக்கக் கூடும் என்றதில், நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப் வீட்டிற்குள் கொரோனா நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அபிஷேக்பச்சன், Breath: into the shadows என்ற வெப் சினிமாவில் நடித்து வருகிறார். அதற்கு டப்பிங் பேசுவதற்கு சவுண்ட் விஷன ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார்.

இதனால் அபிஷேக் பச்சன் வெளியிலிருந்து கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

அபிஷேக் பச்சன் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவுண்ட் விஷன் ஸ்டுடியோ மூடப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: