பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

Share this News:

கொல்கத்தா (10 டிச 2020): மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆவரது வாகனம் கற்களால் வீசி தாக்கப்பட்டுள்ளது. .

மேலும் அவரது மேற்கு வங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியும் காட்டப்பட்டுள்ளது. மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியின் வாகனத்தையும் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர். விஜய வர்கீஸ் தவிர, பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷின் வாகனமும் தாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜக மாநிலத் தலைமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புகார் அளித்துள்ளது.

நட்டாவின் மாநில வருக்கையின்போது பாதுகாப்பு மீறல் உள்ளதாகவும், இந்த நிகழ்வில் காவல்துறையினர் சரியான முறையில் செயல்படவில்லை எனவும் திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார். “திரிணாமுல் ஆர்வலர்கள் கட்சி கொடிகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு எங்கள் வாகனங்களைத் தாக்கினர். அவர்கள் கல் மற்றும் செங்கற்களை வாகனத்தின் மீது வீசினர். வன்முறையில் பல வாகனங்கள் சேதமடைந்தன.” என திலீப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.. பாஜக தலைவர் பயணிக்க ஒவ்வொரு அங்குலமும் போலீஸை நிறுத்த முடியாது. தற்போதைய சூழ்நிலைகளில் மக்களின் இயல்பான எதிர்ப்பு இருக்கலாம். என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply