ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

பெங்களூரு (01 டிச 2022): கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் தடையை தொடர்ந்து அங்கு முஸ்லிம் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகளை நிறுவ கர்நாடக வக்ஃப் வாரியம் திட்டமிட்டுள்ளது. மங்களூரு, ஷிவமொக்கா, ஹாசன், குடகு ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்படும். இக்கல்லூரிகளுக்கான நிதி வக்பு வாரியம் மூலம் திரட்டப்படும்.

மார்ச் 2021 இல் கர்நாடகாவில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஹிஜாப் தடை அமலில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் ஹிஜாப் தடையை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்ப்ட்டது. எனினும் இரு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...