2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களை எரித்துக் கொன்றவர்களுக்கு ஜாமீன்!

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2020): 2002 குஜராத் வன்முறையில் முஸ்லிம்களை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் 2000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில், சர்தார்பூராவில் 33 முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டதும் அடங்கும்.

அந்த வழக்கு தனியாக நடைபெற்று வந்தது. இதில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும் அவர்கள் மத்திய பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து சமூக சேவை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து குற்றவாளிகளும் வாரந்தோறும் ஆறு மணி நேரம் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும். அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஜாமீன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply