விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சியில் 20 பேர் பலி!

மும்பை (10 செப் 2022): மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய 10 நாள் விநாயகர் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில், விநாயகர் சிலையை கரைக்கும்போது சவாங்கியில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர், மற்றொருவர் தேவ்லியில் சிலையை கரைக்கும்போது இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார். மேலும் யவத்மால் மாவட்டத்தில் சிலையை கரைக்கும் போது இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் அகமதுநகர் மாவட்டத்தில், சுபா மற்றும் பெல்வண்டி ஆகிய இடங்களில் இரண்டு பேர் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இறந்தனர், மேலும் இரண்டு பேர் வடக்கு மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் – சாலிஸ்கான் மற்றும் ஜாம்னரில் தலா ஒருவர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

புனே மாவட்டத்தில் உள்ள கோடேகான் மற்றும் யாவத், துலே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட், சதாரா மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் மற்றும் சோலாப்பூர் நகரத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாக்பூர் நகரின் சக்கர்தாரா பகுதியில் விநாயகர் கரைக்கும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தானேயில், கனமழை காரணமாக கோல்பாத் பகுதியில் உள்ள கணேஷ் பந்தல் மீது மரம் இடிந்து விழுந்ததில் 55 வயது பெண் உயிரிழந்தார் மற்றும் 4 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக சிவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விநாயகர் சிலையின் ஆரத்தி விழாவை முன்னிட்டு பந்தல் மீது ஒரு பெரிய மரம் விழுந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தை உட்பட குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை மாலை வாட்கர் கோலிவாடாவில் மின்சார ஜெனரேட்டரின் கேபிள் அறுந்து விழுந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜல்கானில், விநாயகர் ஊர்வலத்தின் போது மேயர் பங்களா மீது ஒரு குழுவினர் கற்களை வீசினர், புனே நகரின் முந்த்வாவில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. புனே மாவட்டத்தில் உள்ள ஷிக்ராபூரில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது, சந்திராபூரில் கணேஷ் மண்டல் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அதேவேளை மும்பையில், விநாயகர் திருவிழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...