நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில் எந்த காயங்களும் இல்லை.

அதனால் இந்த 9 பேருமே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியில்  ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர். மேற்கு வங்கம், பீகாரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

வாரங்கால் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் ஒரு பேக் தயாரிக்கும் பேக்டரி இயங்கி வருகிறது. இதற்கு பக்கத்தில்தான் இந்த கிணறு உள்ளது. இது குறித்து கீசுகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த தொழிலாளர்கள் அந்த தொழிற்சாலை ஒன்றில் 20 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தவர்கள். உயிரிழந்த 9 பேரில் 3 வயது குழந்தையும், 2 வயது குழந்தையும் அடக்கம் என்பது அதிர வைக்கும் தகவல்.

ஒருபுறம் பட்டினி சாவு, ஒருபுறம் தற்கொலை என புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன் திட்டமோ தயாரிப்போ ஏதுமின்றி திடீர் என இரவு 8 மணிக்கு டிவியில் தோன்றி, பிரதமர் மோடி கொடுக்கும் அறிவிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஹாட் நியூஸ்: