அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன.

அதானி ஊழல் விவகாரத்தில் சபை நடவடிக்கைகளை நிறுத்தி விவாதித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காலை கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். .

நேற்று மக்களவையில் காங்கிரஸையும், ராகுல் காந்தியையும் பிரதமர் மோடி தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...