மேயர் பதவிக்கு உவைஸி கட்சி முயற்சி!

ஐதராபாத் (05 டிச 2020): ஹைதராபாத் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி.ஆர்.எஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன.

AIMIM க்கு மேயர் பதவியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என உவைஸி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை 2016 ல் 88 இடங்களை வென்ற டிஆர்எஸ், இந்த முறை 55 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதிலும், டி.ஆர்.எஸ் மேயர் பதவிக்கு உரிமை கோரக்கூடிய 65 இடங்களை அடைய முடியவில்லை. இந்தச் சூழலில்தான் டிஆர்எஸ் மற்றும் AIMIM ஆகியவை கூட்டணிக்கு முன்வந்துள்ளன. .2009 ல் AIMIM இதேபோன்ற முறையில் காங்கிரஸுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டது.

ஒவைசியின் கட்சியான மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் 44 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆனால் கடந்த முறை 4 இடங்களை வென்ற பாஜக இந்த முறை 48 இடங்களை வென்றுள்ளது. இதற்கிடையில், 150 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: