மசூதி குறித்த நீதிமன்ற உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது – முஸ்லீம் சட்டவாரியம் கண்டனம்!

புதுடெல்லி (11 ஏப் 2021): வாரணாசியில் உள்ள கயன்வாபி மசூதியின் இடத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்திற்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அவசியமற்றது என்று (AIMPLB) அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

1991 சட்டத்தின்படி, 1947 இல் தற்போதுள்ள வழிபாட்டுத் தலங்கள் அப்படியே இருக்க வேண்டும். இந்த சட்டம் இருக்கும்போது, ​​கியான்வாபி மசூதியின் இருப்பிடம் குறித்து ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும், இது 1991 சட்டத்திற்கு முரணானது என்றும் (AIMPLB) தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமூக மற்றும் அரசியல் தாக்கத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்த அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இது வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் என்று அது தெரிவித்துள்ளது. . நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கியான்வாபி மஸ்ஜித் கமிட்டி நடத்தி வரும் சட்டப் போராட்டத்திற்கு (AIMPLB) ஆதரவு தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...