பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி!

Share this News:

புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும் அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. எந்த மதச்சார்பற்ற நாட்டிலும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதுதான் எங்களின் வாக்குறுதி. அது நிஜமாக்கப்படும்” என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார். ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட் காரணமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) செயல்படுத்த முடியவில்லை குடியுரிமை திருத்தச். சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தோம். ராமர் கோயிலுக்கு பூமி பூஜையும் செய்தார் மோடி. அயோத்தியில் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை. அதை பாஜக செயல்படுத்தியது என்பதை அமித்ஷா சுட்டிக்காட்டினார்.

சர்தார் வல்லபாய் படேல் இல்லாவிட்டால் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது என்று பாஜக நம்புகிறது. ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் பெயரை உச்சரிக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை. காந்தி-நேரு குடும்பம் அவருக்கு உரிய மரியாதை கிடைக்காமல் பார்த்துக் கொண்டது. இறுதி ஊர்வலம் முதல் பாரத ரத்னா வரை எதுவும் செய்யவில்லை. மாறாக தடைகளை உருவாக்கியது.

படேலுக்கு பிரமாண்ட சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கட்டப்பட்டது. சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்த ஒரு காங்கிரஸ்காரர் கூட வரவில்லை. அவரை கவுரவிக்க காங்கிரஸ் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் வளாகத்தில் ஒலிம்பிக் நடத்தப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.


Share this News:

Leave a Reply