உக்ரைனில் மற்றுமொரு இந்திய மாணவர் மரணம்!

புதுடெல்லி (02 மார்ச் 2022): உக்ரைனில் மற்றும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். அந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர்.

உயிரிழந்த மாணவர் பஞ்சாபை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்கள் அனைவரையும் உடனடியாக கார்கிவை விட்டு வெளியேறுமாறு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்கள் பெசோசின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா குடியிருப்புகளை அடைய வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று, உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்தது.

இது குறித்த ட்வீட்டர் பதிவில்,”கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், ”என்று தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...