அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடலில் வெளியான மற்றுமொரு அதிர வைக்கும் தகவல்!

புதுடெல்லி(18 ஜன 2021): புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அர்னாப் கோஸ்வாமி கொண்டாடியதற்கு ஆதாரமாக வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் BARC தலைமை அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா உடனான வாட்ஸ் ஆப் உரையாடலில் மற்றுமொரு அதிர வைக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அந்த உரையாடலில் பார்த்தோ தாஸ் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக மாறுவதற்கு, அர்னாப் கோஸ்வாமியின் உதவியை கோரியாதும் அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் மூலம் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் 16, 2019 அன்று நடந்த அந்த உரையாடலில் குப்தா பிரதமரின் ஊடக ஆலோசகராக வேலை பெற அர்னாபின் உதவியை நாடியுள்ளார். மேலும் குப்தா, பார்கின் சேவையில் விரக்தியாக இருப்பதாகவும், சொந்த நலன்களின் அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே மோசடி வழக்கைத் தீர்ப்பதற்கு ஒரு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்குமாறு அர்னாபிற்கு பார்த்தோதாஸ் குப்தா அறிவுறுத்தியுள்ளார். டிஆர்.பி. இந்த ஊழல் தொடர்பாக டிசம்பர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்ட குப்தா சிறையில் இருந்தார். இந்நிலையில் அர்னாப் உடனான வாட்ஸ் ஆப் உரையாடல்கள் கசிந்ததை அடுத்து பார்த்தோதாஸ் குப்தா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: