தலைவர்களுக்கிடையே போர் – உடைகிறதா ராஜஸ்தான் காங்கிரஸ்?

புதுடெல்லி (21 ஜன 2023): ராஜஸ்தானில் அசோக் கெலாட்-சச்சின் இடையே நடந்த வார்த்தைப் போரால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் உள்ளது.

இந்த புதிய சர்ச்சை எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கவலை கொள்கிறது.

தலைவர்களுக்குள் வார்த்தைப் போர் நடக்கும் போது தேசிய தலைமை தலையிட்டு சரிசெய்யும். எனினும் சில இடைவெளிக்குப் பிறகு, தலைவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் இதுதான் நிலைமை. சமீபத்திய வினாத்தாள் கசிவு தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அசோக் கெலாட் சச்சினை கட்சியில் கொரோனா என்று வர்ணித்துள்ளார். ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வாய்ப்பைக் கெடுக்கும் என்று தேசியத் தலைமை கருதுகிறது.

இதற்கிடையே குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து விசாரணை நடத்திய காங்கிரஸ் ஒழுங்கு அமைப்பு குழு, காங்கிரஸில் இருந்து 33 தலைவர்களை நீக்கியுள்ளது. சுரேந்திரநகர் மாவட்டத் தலைவர் ராயா ரத்தோட் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவியும், காங்கிரஸ் எம்பியுமான பிரனீத் கவுர் பாஜகவில் இணையவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்த பிறகு அவர் பாஜகவில் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்:

சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே...

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி...