அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

Share this News:

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் அரபி மதரஸா பாடங்களில் இல்லை. மதங்களை காரணம் காட்டி பொது பாடங்கள் மாணவர்களுக்கு பாதிக்கப்படுகின்றன. அதற்கு இடமளிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

மேலும் மதரஸா ஆசிரியர்களின் தற்போதைய வருமானத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply