குடியரசு தின விழாவில் அய்யனார் சிலையில் காணாமல் போன பூணூல்!

Share this News:

புதுடெல்லி (26 ஜன 2020): இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று கோலாகளமாக கொண்டாடப் பட்டது.

டெல்லி ராஜ்பத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரேசில் அதிபர் பொல்சனாரூ,க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.

முப்படைகள் உள்ளிட்ட பல மாநிலங்களின் வண்ணமயமான அலங்கார அணிவகுப்புகளும் இதில் இடம்பெற்றன. அந்த அணிவகுப்பில் தமிழக பாரம்பரிய கலையான கிராமியக் கலைகளை வெளிபடுத்தும் வகையில், கிராமிய கலைஞர்கள் ஆடல் பாடலுடன் நடனமாடினார்கள்.

இதில் தமிழக அரசு சார்பாக இருந்த வாகனத்தில் உள்ள அய்யனார் சிலை முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே ஒத்திகையின்போது அய்யனார் சிலைக்கு பூணூல் போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அது இன்றைய ஊர்வலத்தில் இல்லை.

எனினும் அய்யனாரானது, சிவன் அம்சம் கொண்டது. கையில் உடுக்கையுடன் காணப்படுவது இதன் தனிச்சிறப்பு. இது சிவன் அம்சம் என்பதால், இந்த சிலைக்கு பூணூல் அணிவிக்கலாம் என்று அய்யனார் சிலையை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply