புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் மன்னிக்க முடியாத குற்றம் – தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி வேதனை!

புதுடெல்லி (16 மே 2020): புலம்பெயர் தொழிலாளர்களின் வலிகளும் உயிரிழப்புகளும் மன்னிக்க முடியாத குற்றம் என்று தொழிலதிபர் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு 1,125 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். இதன் மூலம் உலகிலேயே அதிக நன்கொடை வழங்கியவர்களில் மூன்றாவது இடம் பிடித்தவரானார்.

இந்நிலையில் எகனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கடும் வேதனை அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் நிவாரணத் தொகுப்பு சரியான அளவில் கொடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளியின் வீட்டுக்கும், மூன்று மாதங்களுக்கு 7000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவது மிக முக்கியமான நகர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, பொது விநியோகம் மூலமாக, 3.6 மாதங்களுக்கு எண்ணெய், தானியம், உப்பு, மசாலா, சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: