கொரோனா நோயாளிகளுக்காக விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி!

புனே (15 ஜூன் 2020): கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியுதவி அளித்தவர்களில் உலகின் மூன்றாவது பெரிய தனியார் நன்கொடையாளராக உள்ளவர் விப்ரோ நிறுவன தலைவர் அஜீம் பிரேம்ஜி.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் , இந்தியாவின் முன்னணி வணிக அதிபரும் விப்ரோ நிறுவனருமான அசிம் பிரேம்ஜி, கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மகாராஷ்டிரா அரசுக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

இதற்காக அஜீம் ஹாஷிம் பிரேம்ஜி புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தின் ஒரு பிரிவை 450 படுக்கைகள் கொண்ட கோவிட் -19 (கொரோனா வைரஸ்) மருத்துவமனையாக மாற்றியுள்ளார்.

மே முதல் வாரத்தில், விப்ரோவும் மகாராஷ்டிரா அரசும் புனேவில் உள்ள விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுமார் ஒரு மாதத்தில் மருத்துவமனையாக மாற்றியுள்ளார். அஜீம் பிரேம்ஜி.

இந்த 450 படுக்கை வசதி கொண்ட கொரோனா மருத்துவமனையில் 15 தீவிர நோயாளிகளின் பிரிவும் அடங்கும்.

முன்னதாக ஏப்ரல் தொடக்கத்தில், விப்ரோ லிமிடெட், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகியவை பிஎம் கேர் நிதியாக ரூ .1,125 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அஜீம் பிரேம்ஜியின் இந்த சேவைகள் துரதிர்ஷ்ட வசமாக ஊடகங்களில் அதிகம் ஹைலைட் செய்யப்படுவதில்லை என்பது நிதர்சனம்.

ஹாட் நியூஸ்: