குவாரண்டீன் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என பெயரிட்ட தம்பதிகள்!

இம்பால் (03 ஜூன் 2020): தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழந்துள்ளனர் அந்த குழந்தையின் தம்பதிகள்.

மே 27 அன்று கோவாவிலிருந்து சிறப்பு ரயிலில் மணிப்பூர் வந்த பயணிகள் இமானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர் . அவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த பெண் மீது மருத்துவர்களால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் “அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை சிக்கல்கள் இல்லாமல் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள்” என்று காங்போக்பி மாவட்ட மருத்துவமனையின் பொறுப்பான மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாட்டின்லின் ஹாக்கிப் கூறினார்.

3.2 கிலோ எடையுள்ள இந்த குழந்தையை மகப்பேறு மருத்துவர் உட்பட இரண்டு மருத்துவர்கள் பிரசவித்தனர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அதிகாரிகளால் நியமிக்கப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு குழந்தையின் பெற்றோர்கள் இமானுவேல் குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...