மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

Share this News:

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது.

2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி இந்த ஆவணப்படம் பேசுகிறது.

குஜராத் கலவரம் மற்றும் அதில் மோடியின் பங்கை விளக்கும் ‘இந்தியா: மோடி கேள்வி’ ஆவணப்படத்தின் முதல் பகுதி, நாட்டில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்தது. இதற்கிடையில், இரண்டாம் பாகத்தையும் பிபிசி ஒளிபரப்பியுள்ளது.

இரண்டாவது பாகத்தில், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நரேந்திர மோடி அரசின் ஆட்சியை ஆரய்ந்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் மோடி அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை பேசுகிறது.

இரண்டாவது பகுதியில் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் இதில் குறிப்பாக ஆராயப்பட்டுள்ளன.

முதல் பாகத்திற்கு எதிராக களமிறங்கிய ஒன்றிய அரசு, ஆதன் யூடியூப் மற்றும் ட்விட்டரில் உள்ள இணைப்புகளை திரும்பப் பெற உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் ஆட்சேபனைகளை முறியடித்து இரண்டாம் பாகத்தை பிபிசி வெளியிட்டுள்ளது.

பல எதிர்ப்புகள் இருந்தபோதிலும் பிபிசி இந்த ஆவணப்படம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.


Share this News:

Leave a Reply