முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

Share this News:

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட வருமானம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் பிபிசி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஷிப்டுகளாக 24 அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிபிசிக்கு எதிரான நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு டெல்லி அலுவலகம் முன்பு மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன. பிபிசி ஊடக நிறுவனத்துக்கு எதிரான மத்திய நடவடிக்கைக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.

இதற்கிடையே வருமான வரித்துறையின் சோதனையை நியாயப்படுத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிலர் இந்திய செய்தி நிறுவனங்களை விட வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை நம்புவதாகவும், நாட்டின் நீதிமன்றங்களை கூட அவர்கள் நம்புவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.


Share this News:

Leave a Reply