4 வருடமாக படுக்கையில் கிடந்த நோயாளி கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எழுந்து நடக்கத் தொடங்கிய அதிசயம்!

Share this News:

பொகாரோ (15 ஜன 2022): ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்த ஒருவர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார்.

பொகாரோவின் பெடார்வார் கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளானார். விபத்தைத் தொடர்ந்து அவர் குரல் இழந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் கிடந்தார்.

இந்நிலையில் துலர்சந்த் ஜனவரி 4 அன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசியைப் பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு துலர்சந்தின் உடல் செயல்படத் தொடங்கியது.

இதுகுறித்து துலர்சந்த் ANI இடம் கூறுகையில், “இந்த தடுப்பூசியை எடுத்ததில் மகிழ்ச்சி. ஜனவரி 4 ஆம் தேதி தடுப்பூசி போட்டதில் இருந்து என் கால்களில் அசைவு உள்ளது. இழந்த குரலையும் மீண்டும் பெற்றுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பொகாரோவின் சிவில் சர்ஜன் டாக்டர் ஜிதேந்திர குமார் கூறுகையில், இந்த சம்பவம் ஆச்சரியமாக இருந்தாலும், துலர்சந்தின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்ய மருத்துவக் குழுவை அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply