பீகார் அமைச்சரவையை பிரிப்பதில் குழப்பம் – நிதிஷ் குமாருக்கு பாஜக நெருக்கடி!

பாட்னா (14 நவ 2020): பீகாரில், என்.டி.ஏ ஆட்சியமைக்கும் நிலையில் துறைகளைப் பிரிப்பதில் பாஜக தொடர்ந்து தகராறு செய்து வருகிறது.

பிகாரில் நிதிஷ்குமார் கட்சி குறைவான இடங்களை பிடித்த போதும் அவரே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் யார் என்று பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. என்டிஏ நாளை நடத்தும் கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வார் என்பது தெரியவந்துள்ளது.

துணை முதல்வர் மட்டுமல்லாமல் உள்துறை, நிதி மற்றும் கல்வித் துறைகள் மற்றும் சபாநாயகர் பதவி துணை முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பதவி என அனைத்திலும் பாஜக பங்கு பெற வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும், முதலமைச்சர் பதவியுடன் முக்கிய துறைகளை நிதீஷ்குமாரநிதிஷ்குமார் விரும்புகிறார். ஜிதான் ராம் மஞ்சிக்கு பாஜக ஆளுநர் பதவி வழங்கப்பட்டதால் எச்ஏஎம் கட்சி மந்திரி பதவியை நாடவில்லை என்று தெரிகிறது எனினும். இறுதி முடிவு நாளை மதியம் 12.30 மணிக்கு பாட்னாவில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்படும்.

ஹாட் நியூஸ்: