பில்கிஸ் பானு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (13 டிச 2022): பில்கிஸ் பானு வழக்கை உச்சநீதிமன்றம் இன்று பரிசீலிக்கவுள்ளது. நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும்.

குஜராத் கலவரத்தின் போது தன்னை வன்புணர்ந்து சித்திரவதை செய்து தனது குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

முன்னதாக, ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை குறைப்பது குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று தெளிவுபடுத்தியது.

இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு கூறி 11 பேரையும் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: