தேச விரோதி – ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் காவல்துறையில் புகார்!

Share this News:

புதுடெல்லி (06 செப் 2022): பிரபல ஊடகவியலாளரும் Alt News இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு எதிராக பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது ஒரு கேட்சை கைவிட்டதால், கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் சமூக ஊடகங்களில் மோசமான ட்ரோலிங்கிற்கு உட்படுத்தப்பட்டார்.

சமூக ஊடகங்களில் வெளியான ட்ரோல்கள் பெருமாலானவை “பாகிஸ்தானி கணக்குகளில்” இருந்து வந்தவை என்றும், “தேச விரோத சக்திகளின்” உத்தரவின் பேரில் சுபைர் செயல்பட்டுள்ளார். என்று பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “முகமது ஜுபைர் எல்லையில் உள்ள தேசவிரோதிகளுடன் கைகோர்த்து, காலிஸ்தானி என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளார். பல ஸ்கிரீன்ஷாட்களை புத்திசாலித்தனமாக எடுத்து, பின்னர் 2022 செப்டம்பர் 5 அன்று 00:05 மணிக்கு இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். ட்வீட் செய்கிறார், ”என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மா முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் பேசிய பேச்சை உடலக அளவில் ட்ரெண்ட் ஆக்கியவர் முஹம்மது ஜுபைர். நுபூர் சர்மாவின் பேச்சு உலக அளவில் ட்ரெண்ட் ஆகி இந்திய அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply