பாஜக தலைவர் பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாசிட்டிவ்!

Share this News:

புதுடெல்லி (31 ஜன 2022): பாஜக தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக பிரக்யா சிங் ட்வீட் செய்துள்ளார். கொரோனா பரிசோதனை அறிக்கை இன்று வெளியானதாகவும் , அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக அவருடன் , நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு, பிரக்யா சிங் தாக்கூர், பசுவின் சிறுநீர், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் என்று கூறியிருந்தார். தனக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், தினமும் பசுவின் சிறுநீர் குடிப்பதாகவும் தனக்கு இன்னும் கோவிட் வைரஸ் தாக்கவில்லை என்றும் பிரக்யா சிங் கூறியிருந்தார். 2019 ஆம் ஆண்டில், மற்றொரு நேர்காணலில், மாட்டு மூத்திரம் சாப்பிடுவது தனது புற்றுநோயைக் குணப்படுத்த உதவியது என்றும் அது மிகப்பெரிய ஆரோக்கிய நன்மை என்றும் கூறினார்.

பிரக்யா சிங் தாக்கூர் 2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையிருந்தார். மலேகான் குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டது மற்றும் பலர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்த பிரக்யாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி 2017ஆம் ஆண்டு என்ஐஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2019 மக்களவைத் தேர்தலில், போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply