பாஜக மண்ணை கவ்வ வேண்டியதுதான் – பாஜக தலைவர்கள் அதிருப்தி!

புதுடெல்லி (24 ஜன 2021): விவசாயிகளின் வேலைநிறுத்தத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து பஞ்சாப் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நினைத்திருந்தால் வேலைநிறுத்தத்தை ஒரு நாளில் முடித்திருக்க முடியும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் லட்சுமி காந்தா சாவ்லா கூறினார். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாஜாக தலைவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சஸப்பில் நகராட்சி மன்றத் தேர்தல் பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக ஆர்வமில்லாமல் இருப்பதாக பஞ்சாசப் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் உள்ள பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன்னால் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரவிருக்கும் நாட்களில் அதிகமான பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி அகாலிதளத்தில் சேருவார்கள் என்று பஞ்சாப் பாஜக தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில், 15 க்கும் மேற்பட்ட பாஜக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி அகாலிதளத்தில் சேர்ந்துள்ளனர். டெல்லியில் விவசாயிகளுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அக்டோபர் 13 ம் தேதி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக மஜீந்தர் சிங் காங் தெரிவித்துள்ளார். .

ஆனால், பாஜக மாநில செயலாளர் தினேஷ்குமார், கட்சியின் தரப்பில் எந்த பின்னடைவும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காங்கிரஸ் நிதியுதவி அளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இப்போது எதிர்ப்பு கம்யூனிஸ்டுகளின் கைகளில் உள்ளது. அவர்கள் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை. பஞ்சாபில் உள்ள 31 விவசாயிகள் சங்கங்களில் 26 கம்யூனிச அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது, ஆனால் தொழிற்சங்கங்கள் அதை நீடிக்கின்றன என்று அவர் கூறினார். அவர் எதிர்வரும் தேர்தல்களில் அனைத்து நகராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிகளில் பாஜக போட்டியிடும். 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத்தில் அரசை அமைக்கும் என்றும் தினேஷ்குமார் கூறினார்.

ஹாட் நியூஸ்: