கொரோனா தடுப்பூசியும் முஸ்லிம்களும் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

லக்னோ (13 ஜன 2021); “இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் 19 தடுப்பூசிகளை நம்பாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்.” என்று உத்தரபிரதேசம் சர்தானாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சங்கீதா சிங் சோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் “சில முஸ்லிம்கள் நம் நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பாதது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் ஆன்மா பாகிஸ்தானின் ஆன்மா. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், எங்கள் விஞ்ஞானிகளின் பணியில் சந்தேகம் கொள்ளக்கூடாது, ”என்று சங்கீதா சிங் சோமன் கூறியுள்ளார்.

கோவிட் தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வதந்திகள் பரவின. ஆனால் இது வெறும் போலி பிரச்சாரம் என்று அதிகாரிகளே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...