பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் இனரீதியிலான நச்சுக் கருத்து!

போபால் (14 டிச 2020): பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் மீண்டும் இனரீதியான அவதூறுகளை பரப்பி சர்ச்சசையில் சிக்கியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபாலில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், சூத்ராவை த்ராவை சூத்ரா என்று அழைப்பது எப்படி தவறாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாங்கள் சத்ரியரை சத்திரியர் என்றே அழைக்கிறோம், அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிராமணரை ஒரு பிராமணர் என்று அழைப்போம் , அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒரு வைஷ்யரை ஒரு வைஷ்யர் என்று அழைப்பது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது, ஆனால் ஒரு சூத்ரரை சூத்திரா என்று அழைத்தால், அவர்கள் மோசமாக உணர்கிறார்கள் . இதற்கு காரணம் என்ன?”, என்று பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பிரக்யா சிங் கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் இதுபோன்ற கருத்துக்களுக்காக கண்டிக்கப்பட்ட போதிலும், பிரக்யா தாக்கூர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் மீது வங்காள விஜயத்தின் போது தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரக்யா சிங் தாக்கூர் இந்த சர்சசை கருத்தை தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...