கொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (28 மே 2020): பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

இந்தச் சூழலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.